நுங்கில் மறைந்துள்ள 10 அதிசயங்கள்

0
Nungu TourismTN

நுங்கா? நொங்கா?😕

நுங்கு அல்லது நொங்கை பனி பழம்(Ice fruit) ❄️மற்றும் பனை பழம் என்றும் கூறுவார்கள். இதை வெப்பமான கோடை🏜️ காலத்தில் சாப்பிட்டால் உடல் மிகவும் குழுமையாக ⛄இருக்கும். இதில் வைட்டமின் A, C மற்றும் B காம்ப்லெஸ்(Complex) அடங்கியுள்ளது.

தினை விதைத்தவன் தின்னுட்டு🥥 சாவான். பனை விதைத்தவன் பாத்துட்டு ⌛சாவான்.

பழமொழி

1. உடல் இடையை குறைக்க நுங்கு 💪🏻:

நுங்கு ஒரு இயற்கை குளிராக்குதிரவம்(Coolant). உடல் இடையை🏋️‍♀️ குறைப்பதற்கு நுங்கு சாப்பிடலாம் ஏனென்றால் இதில் நிறைய ஊட்ட சத்துக்கள் இருப்பதால் பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது. நீர் சத்துக்கள் நிறைந்த நுங்கு சாப்பிடுவதால், நீர் சுரப்பை அதிகரித்து உடல் இளைக்க🤓 உதவி செய்கிறது.

2. நுங்கு சாப்பிட்டு பாருங்கள் கோடை காலத்தில் 😎:

நுங்கு சாப்பிட்டால் இரும்புச்சத்து, துத்தநாக சத்து(Zinc), பாஸ்பரஸ்(Phosphorus), பொட்டாசியம்(Potassium) சத்துக்கள் கிடைக்கும். இவை உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக கோடையில்♨️ சில கிருமிகள் பெருகுவதால் சின்னம்மை, பெரியம்மை⚠️ போன்ற நோய்கள் வருகிறது. அப்பொழுது நுங்கு சாப்பிட்டால், அதில் இருக்கும் கூலன்ட் என்னும் குளிராக்குதிரவம் கோடைகாலத்தில் தோன்றும் அம்மைநோய்களால் உண்டாகும் அரிப்பை போக்கும்.

3. மார்பகப்புற்றுநோய்🙍:

மார்பகப்புற்றுநோய் பொதுவாக 50 வயது பெண்களுக்கு வருகிறது. முக்கியமாக வயதான பெண்களை👵 குறிவைக்கிறது. பல்வேறு இயற்கை உணவுகளுடன் சேர்த்து நுங்கு சாப்பிட்டு வர அதில் உள்ள “பைட்டோ கெமிக்கல்ஸ் அந்தோசயனின்” எனப்படும் வேதிப் பொருள் உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கிறது.

4. சோர்வாக இருக்கிறதா நுங்கு சாப்பிடலாமே!👌:

அதிகஅளவில் கார்போஹைட்ரெட்ஸ் உண்பதாலும், தூக்கமின்மை😪, அதிக மனஅழுத்தம்😫, ப்ரோடீன் குறைபாடு ஆகிய காரணத்தாலும் உடல் சோர்வடையும். தினமும் நுங்கு சாப்பிட்டு வர குளுக்கோஸ் லெவலை அதிகரித்து ஊட்ட சத்துக்கள்(Nutrients) மற்றும் தனிம(Minerals) அளவுகளை சமமாக்கிறது.

5. கல்லீரல் பாதிப்புக்கு நுங்கு:

குடிப்பழக்கத்தால்🥂 கல்லீரல் வீக்கம் அடைவதுண்டு. வீக்கம் அடைவது மட்டுமின்றி, மதுவில் உள்ள நச்சுக்கள் கல்லீரலில் தங்கி விடுகிறது. அப்பொழுது நுங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர, கல்லீரல் சுத்தமடையும். ஏனென்றால் நுங்கில் பொட்டாசியம் இருப்பதால் நச்சுக்களை மிகுந்த அளவில் வெளியேற்றுகிறது.

6. வயிறு பிரச்சனையா நுங்கு சாப்பிடலாம்😥:

நம்மில் சிலருக்கு வயிறு எரிச்சல்😫 இருப்பதுண்டு அதை அல்சர் எனவும் கூறுவர், அப்பொழுது நுங்கு சாப்பிடலாம். நுங்கு செரிமான மற்றும் வயிறு சம்மந்தமான வியாதிகளை குணப்படுத்தும். கோடைகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை விரட்டும். பலருக்கு சதைப்பற்றுள்ள பழத்தை சாப்பிட பிடிக்காது, அப்பொழுது வெறும் வயிற்றில் ஜூஸ்🍹 குடிக்கலாம்.

நுங்கு பனை மரத்தில் இருந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது😱!

7. குமட்டுகிறதா🤮 நுங்கு சாப்பிடுங்க :

எலுமிச்சை குமட்டலுக்கு🤢 உதவவில்லையா? நுங்கு சாப்பிடுங்க. நுங்கு குமட்டலுக்கு நல்ல மருந்து. அடிக்கடி சாப்பிட்டு வர ஹார்மோன் சுரப்பதை சரி செய்கிறது. கர்ப்பிணி🤰 பெண்கள் அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் நுங்கு சாப்பிட்டு வர வாந்தி மற்றும் குமட்டல் தீரும்.

8. Software Engineers 👨‍💻? நுங்கு சாப்பிடலாம்:

உடலுக்கு சூடு ஏற்படும் வகையில் வேலைசெய்பவரா? கணினி முன் வேலை செய்பவர்கள்🖱️, விளையாட்டு வீரர்கள்⛹️‍♀️ ஆகியோர் சுலபமாக நீர்ச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை இழக்கலாம். அவர்கள் தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் இழந்த சத்துக்களை மீண்டும் பெறலாம்.

9. இரவு நேரங்களில் விழித்திருப்பவரா😴 நுங்கு சாப்பிடலாம்:

அதிக நேரம் கண்👀 விழித்து வேலை பார்க்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல் மற்றும் கோடை காலங்களில் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றால் கண் வலி😵 வரலாம். தினமும் காலையில் நுங்கு சாப்பிட்டு வர கண் சம்பந்தமான பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்😉. மேலும் கண்பார்வையை மேம்படுத்தும்.

10. உடல் நீரிழப்பு(Dehydration) உள்ளதா நுங்கு சாப்பிடுங்க:

ஹைட்ரேஷன்(Hydration) என்பது இளம் வயதினருக்கு மிகவும் அவசியமானது. ஏனென்றால், நாகரீக வளர்ச்சியால் பாஸ்ட் புட்🌯 காலத்திற்கு மாறிவிட்டனர். இதன் காரணமாக முடிகொட்டுதல்👴, சருமம் வறட்சி, அனீமியா போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். தண்ணீர் அருந்துவதோடு நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள்🍠 உண்ணலாம். அதில் நுங்கு பெரிய பங்கு வகிக்கிறது.

நுங்கு உண்ட அனுபவம் இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும்👬👭 இதில் உள்ள மருத்துவ குணங்களை சொல்லுங்கள்🗣️.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here