வெள்ளி நீர்வீழ்ச்சி கொடைக்கானல்

1
வெள்ளி நீர்வீழ்ச்சி

சுமார் 180 அடி உயரம் கொண்ட வெள்ளி நீர்வீழ்ச்சி கொடைக்கானலில் உள்ள மிக பெரிய மற்றும் அழகிய அருவி. கொடைக்கானலின் உள்ளே நுழையும்போதே இந்த அருவி மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆம், பழனி மற்றும் மதுரை வழியே பயணம் செய்து வந்தால், பெருமாள் மலை வந்துதான் வர வேண்டும். பெருமாள் மலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டரில் ஒரு வாகன சோதனை சாவடி மையம் அமைந்துள்ளது. அதை கடந்த அடுத்த நொடியே, இந்த அற்புதமான அருவி 💖 உங்களை வரவேற்கும்.

வெள்ளி நீர்வீழ்ச்சியின் வழித்தடம்

கரடி ஷோலா நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் ஏரியின் நீர் வழி தடத்துடன் இணைந்து பாலர் ஆறாக உருவெடுத்து இந்த வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது. இந்த இரண்டு நீர் ஆதாரங்களும் தான் வெள்ளி நீர்விழ்ச்சிக்கு முக்கிய நீர்வரத்து. இந்த அழகிய வெள்ளி அருவி, பிறகு கொடைக்கானல் பழனி சாலையின் ஓரத்திலேயே சென்று பாலார் அணையில் சேர்ந்து விடும். நீர் குறைவாக இருப்பின், சில சமயம் மலைகளுக்குள்ளேயே நின்று விடும்.

வெள்ளி அடுக்கு நீர்விழ்ச்சியில் என்ன செய்யலாம்?

நீர் வீழ்ச்சி என்றாலே அனைவருக்கும் அதில் குளித்து மகிழ வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் இங்கு குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். ஏனென்றால், எந்த நேரமும் நீரின் வேகம் அதிகரிக்கலாம். குளித்து மகிழ முடியவில்லை என்று கவலை படாமல், நீங்கள் அங்குள்ள அருவியை ரசித்து கொண்டே இயற்க்கை காற்றை சுவாசியுங்கள். அதுவே மிக பெரிய திருப்தியை உங்களுக்கு கொடுக்கும். இது தவிர அருகிலேயே குளிருக்கு ஏற்றவாறு சுட சுட டீ மற்றும் மக்கானி போன்ற ஆரோக்கியமான உணவுகளும் 🍍 உள்ளன. செல்ஃபீ 🤳 எடுத்து மகிழ இது மிக சிறந்த இடம்.

Silver Cascade Falls

நம்ப முடியாத இரண்டு உண்மைகள்

1. வெள்ளி நீர்வீழ்ச்சி மிக வேகமான அருவி

ஆமாம், கடந்த அக்டோபர் மாதம்(2020), ஒரு அழகிய நாளில் காலை 9 மணிக்கு சோதனை சாவடியை கடந்து வெள்ளி நீர்விழ்ச்சியை கண்டதும் ஏமாற்றம் அடைந்தோம். காரணம், அருவியில் மிகவும் குறைவாக தண்ணீர் வந்தது. சரி என்று கொடைக்கானலை சுற்றி பார்க்க சென்றோம். அங்கே மலை தூறி கொண்டே இருந்ததால், எந்த இடத்தையும் முழுமையாக பார்க்க முடியவில்லை.

கடுப்பாகி, திரும்பி மாலை ஒரு 5 மணிக்கு கீழே வரும் பொழுது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. வெள்ளி நீர்விழ்ச்சியில் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்து அதிவேகமாக சாலையை கடந்து சென்றது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் ஒரு அரை மணி நேரம் அங்கே இருந்து ரசித்து விட்டு அன்றைய நாளை இனிமையாக முடித்து விட்டு வந்தோம்.

வெறும் தூறல் தூறியதற்க்கே, திரும்பி வருவதற்குள் அருவி நிறைந்து வழிந்தது. இதனால் தானோ என்னவோ அங்கு குளிக்க அனுமதி இல்லை.

வெள்ளி நீர்விழ்ச்சி

2. கொடைக்கானல், உங்களை வெள்ளி நீர்வீழ்ச்சியோடு வரவேற்கும்

நீங்கள் கொடைக்கானலிற்க்கு முதல் முறை வருகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த அனுபவம் நீங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக தான் இருக்கும். பல மலைகளுக்கு இடையே வாகனத்தை ஒட்டி வந்து நின்று 5 நிமிடம் களைப்பாறும் எண்ணத்தோடு வந்தால் இந்த இடத்தை கண்ட மகிழ்ச்சியில் வண்டியை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு வந்து விடுவீர்கள். அவ்வளவு அழகாக கொடைக்கானலுக்கு 5 கிலோ மீட்டர் இருக்கும் முன்பே இந்த அருவி உங்களை வருக வருக என்று வரவேற்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

வெள்ளி நீர்விழ்ச்சி Entrance

வெள்ளி நீர்வீழ்ச்சி நேரம் மற்றும் கட்டணம்

வெள்ளி அடுக்கு நீர்விழ்ச்சியின் நேரம்

எல்லா நேரங்களிலும் நீங்கள் இந்த அருவியை கண்டு மகிழலாம்.

வெள்ளி நீர்விழ்ச்சியை காண கட்டணம்

ரோட்டின் மிக அருகில் அமைந்துள்ள இந்த அருவிக்கு கட்டணம் ஏதும் இல்லை.

வெள்ளி நீர்விழ்ச்சியை பற்றி சில முக்கியமான கேள்விகள்

அருவி உள்ளே இறங்கலாமா?

உள்ளே இறங்கும் வழிகள் கம்பியால் ஆனா தடுப்புகள் கொண்டு பாதுகாக்க பட்டிருக்கும். இறங்க அனுமதி இல்லை.

வெள்ளி நீர்விழ்ச்சி

வெள்ளி நீர்விழ்ச்சியில் குளிக்கலாமா?

வாய்ப்பே இல்லை.

நான் வண்டியில் வரவில்லை எப்படி வருவது?

கொடைக்கானல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது. இல்லை எனில் ஆட்டோ வசதிகளும் உள்ளன.

வெள்ளி அருவியின் பருவ நிலை என்ன?

மலை காலங்களில் அதிகமா நீர் இருக்கும் எப்பொழுதும். மற்ற சமயங்களில் மழையைப் பொறுத்தது.

Silver Falls Less water

வெள்ளி அருவி இன்று திறந்துள்ளதா?

வெள்ளி அருவி வருடத்தில் உள்ள 365 நாட்களும் திறந்து தான் இருக்கும்.

வேறு ஏதும் தகவல் தேவையா?

எந்த தகவல் தேவை என்றாலும் உடனடி உதவிக்கு எங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரியுமா?

கடல் மட்டத்தில் இருந்து கொடைக்கானல் 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

Read this article in English.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here