வட்டக்கனால் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல்

0
வட்டக்கனால் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல்

கொடைக்கானல் டால்பின் மூக்கிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த அழகிய வட்டக்கனால் நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். காடுகளுக்குள் அமைந்திருக்கும் இந்த அருவி சிறியதாக இருந்தாலும், அங்கே செல்லும் பொது மிக வித்யாசமாக உணர்வீர்கள். இந்த அருவி லிரில் நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே செல்ல லிரில் அருவிக்கு முன்னேயே நீங்கள் டால்பின் மூக்கிற்கு செல்லும் பாதையில் திரும்ப வேண்டும்.

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி

வட்டக்கனாலின் 2 முக்கிய அம்சங்கள்

வனம்

ஆம், வனத்தின் உள்ளே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, இயற்கை காதலர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஈர்க்கும். இது தவிர, புகைப்படக் கலைஞர்களுக்கும் வட்டகனல் வீழ்ச்சி மிகவும் பிடிக்கும் ஒரு இடம். அழகான பறவைகளிடமிருந்து கூ-கூ, கி-கி போன்ற இசைகளை நீங்கள் கேட்கலாம். இந்த ஒலிகள் வட்டக்கனல் நீர்வீழ்ச்சிக்கான உங்கள் பயணத்தை மேலும் சிறப்பிக்கும். பறவைகளின் பின்னணி இசையுடன் நீர்வீழ்ச்சியின் இயற்கை காட்சியை நீங்கள் ரசிக்கலாம். சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாகவே இருக்கும். சனி, ஞாயிற்று கிழமைகளில் செல்லாமல், வார நாட்களில் சென்றால் உங்கள் பயணம் அழகாக அமையும்.

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி வனம்

வானிலை

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி கொடைக்கானலில் வானிலை எப்பொழுதுமே ஜில்லென்று தான் இருக்கும். அதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு, ஒன்று, எப்பொழுதுமே குளிர் காற்று வீசும் கொடைக்கானல், மற்றொன்று இயற்கையான காடுகளுக்குள் அமைந்துள்ளதால், குளு குளு என்று எப்போதுமே இருக்கும். வெயில் காலங்களில் கூட ஜில்லென்று தான் இருக்கும்.

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி செல்லும் பாதை

லிரில் அருவியிலிருந்து 2 கிலோ மீட்டர் வரும் இந்த பயணம் மிகவும் வேறுபட்டதாக இருக்கும். ஆரம்பத்திலிருந்தே இந்த பயணம் குறுகிய சாலைகளில் செல்லும். உங்களுடனே லிரில் அருவியும் வட்டக்கனால் அருவி வரை பயணம் செய்யும். அந்த ஒரு அழகிய 15 நிமிட பயணம் கண்ணிற்கு மட்டும் பசுமையோடு விருந்தளிக்காமல் உங்கள் உடலின் வெப்பத்தை முழுமையாக குறைத்து விடும். ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அளவிற்கு தான் இந்த சாலை அமைந்திருக்கும். ஆங்காங்கே கொஞ்சம் பெரியதாக சாலை இருக்கும் இடத்தில் வாகனங்களுக்கு வழி கிடைக்கும்.

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி செல்லும் வழி

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி அனுமதி நேரம்

இங்கு எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம். காரணம், இங்கே அமைந்துள்ள டால்பின் மூக்கின் அருகே அதிக அளவில் உல்லாசப் போக்கிடங்கள் உள்ளன. அங்கே தங்குவதற்கு அவ்வப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாவே இருக்கும். அருவிக்கு அருகிலேயே ஒரு காவல் நிலையம் உள்ளது. உங்களுக்கு எதாவது உதவி தேவை என்றால் அவர்களை அணுகலாம்.

வட்டக்கனால் நீர்வீழ்ச்சி – நீர்வரத்து எப்போது அதிகமாக இருக்கும் ?

கொடைக்கானலில் எப்போதெல்லாம் மழை பொழிகிறதோ அப்போதெல்லாம் இங்கு நீர்வரத்து அதிகமா இருக்கும். மழைப்பொழிவு குறைவாக உள்ள நேரங்களில் நீர்வரத்து குறைவாகவே இருக்கும். ஆனால், எப்பொழுதுமே கண்டிப்பாக குறைந்த அளவிலாவது நீர்வரத்து இருக்கும்.

Vattakanal Neerveelchi

வட்டக்கனால் நீர்வீழ்ச்சியில் என்னெவெல்லாம் செய்யலாம்?

  • புகைப்படம் எடுக்க சரியான இடம்.
  • அருவியின் எழில்மிகு தோற்றத்தை கண்டு மகிழலாம்.
  • உங்கள் உதவிக்கு காவல் நிலையம் அருகிலேயே உள்ளது.
  • பைனாப்பிள் போன்ற பழங்கள் இங்கே கிடைக்கும் சாப்பிட.
  • 30 நிமிடம் வரை நிம்மதியாக இருக்கலாம் இயற்கையுடன்.
  • டால்பின் மூக்கில் மலையிறக்கம் செய்ய(Trekking), இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தான்.
  • குறைந்த விலையில் நல்ல தங்கும் விடுதிகளும் உள்ளன.

கார் ஆ இல்லை பைக் ஆ?

இங்கு பேருந்து வசதிகள் கிடையாது என்பதால், கண்டிப்பாக நீங்கள் உங்களது கார் அல்லது பைக்கில் தான் வந்தாக வேண்டும். கூட்டமான காலங்களில் பைக்கில் வந்தால் உங்கள் பயணம் அருமையாக இருக்கும். மற்ற நாட்களில் நீங்கள் காரில் வந்தால் கூட போக்குவரத்து நெரிசல் பெரிதாக ஏற்படாது. இல்லையெனில், கொடைக்கானலில், நீங்கள் ஒரு ஆட்டோ அல்லது கார் புக் செய்து தான் வர வேண்டும். விலை ஓரளவு குறைவாகவே இருக்கும்.

அருகில் எங்கே செல்லலாம்?

Liril Falls

Pillar Rocks

Guna Caves

வெள்ளி நீர்வீழ்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here