கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்றுபெயர் பெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரம் தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. உடுமலை நகரில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது.
தெற்கே லிங்கம் உள்ளது, இந்த நகரின் சிறப்பாகும். தளி பாளையப்பட்டு பொறுப்பில் இருந்து சித்தாண்டீஸ்வரர் கோயிலுக்கு பூமி தானமிடப்பட்டது, கோவிலை பராமரிப்பது முதலியவற்றை தெரிவிக்கும் செப்புபட்டையம் தளி பாளையப்பட்டு எத்தலப்ப நாயக்கரால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
கோயில்கடவு, கொழுமம், கணியூர், கடத்தூர், காரதொழுவு என பல்வேறு இடங்களில் மிகப் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது.
கிழக்கே தமிழனின் முதல் கடவுளான பழனி முருகன் எழுந்தருளியிருக்கும் பழனியும், மேற்கே ஆணைமலையில் உள்ள மாசாணியம்மணும் அமையப்பெற்றது.
உடுமலைப்பேட்டை நகராட்சியாக 1918 ஆண்டு தரம் பெற்றது.
இரண்டாம் தரம் 1970 ஆண்டும் முதல் தரம் 1979 ஆண்டு பெற்றது.
இதனுடைய மொத்தபரப்பளவு 7.41 km இதில் நகர்புறம் 6.582 எனவும் ,0.828 km 1 கிராமபுறம் எனவும் கொண்டது.
உடுமலைப்பேட்டை முதலில் கோவை மாவட்டத்துடன் இனணந்து இருந்தது.
பின்பு பல காரணங்களால் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதனுடன் உடுமலைப்பேட்டை ஒரு நகராட்சியாக இணைந்தது இதனை பல உள்ளூர் மக்கள் எதிர்த்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பழமையான நகராட்சி என்ற பெருமை உடுமலையையே சேரும். உடுமலை ஒரு தொழில் நகரமாகவும் மற்றும் விவசாயம் செய்யும் வகையிலும் உள்ளது.
முக்கிய வழித்தடங்கள்:
- திண்டுக்கல் மற்றும் கோவை இடையே முக்கிய சாலையாக உள்ளது இந்த சாலை வர்த்தக ரீதியில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
- பழனியையும் பொள்ளாச்சியையும் ரயில்வே பாதைமூலம் உடுமலை இணைக்கிறது.
- பழனி மற்றும் மதுரை, திருச்செந்தூர் ஆகிய வழித்தடத்திற்கு கேரளத்தவர்கள் உடுமலையை பிரதான பாதையாக பயன்படுத்துகின்றனர்.
- தமிழ்நாடு – கேரளா இணைக்கும் இடமாக உடுமலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாலக்காடு – சென்னை ரயில் செல்லும் பாதையில் முக்கிய இடமாக உள்ளது நமது உடுமலைபேட்டை.
வரலாறு சொல்லும் நீதி மன்றம் :
உடுமலை நீதிமன்றம் சுற்றுவட்டரத்திலேயே முதன்மையானது. குற்றம் என்றால் மேற்க்கே பாலக்காடு வரை நமது உடுமலை நீதிமன்றத்தையே நாடி வருவார்கள். இதனாலேயே, காலை 11.00 மணிக்கெல்லாம் அப்போதைய காலத்தில் நீதிமன்றம் தொடங்கிவிடும்.
உடுமலைப் பேட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி:
வேம்பு சதுக்கம் தற்போது பழமையும், புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது, ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற மேடை அமைப்பு தற்போதும் இருந்து வருகிறது.
அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தது. வகுப்பு அறையில் இருந்து வரிசையாக வேம்பு சதுக்கத்திற்கு வந்து நின்றவுடன் கொஞ்சம் சல சலப்பு பேச்சு சத்தம் வந்துகொண்டு இருக்கும்.
நம்ம ஆசிரியர் யாரவது சும்மா மொத்துனா முதுகில் அடி விழும் சத்தம் கேட்டு பின்விழும் சத்தம் கேட்காமல் இருக்கும் அப்படியொரு அமைதிநிலவும். வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளை எண்ணி நமது கண்களை கண்ணீர் மறைக்கும்.
வேம்பு சதுக்கத்தில் உரையாற்றியவர்கள்:
- நீதியரசர் திரு. மோகன்
- ச.ராமலிங்கம்
- முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா
- திரு.கே.எ .மதியழகன்.
- திரு.கிருபானந்த வாரியார்.
பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி கவுண்டர் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் நமது மனதில் நிழலாடுகிறது.