மணத்தக்காளியின் பயன்கள், மருத்துவ குணங்கள்

0
Sukkiti Keerai

மணத்தக்காளி: Black Night Shade

மணத்தக்காளியை சில கிராமங்களில் சுக்கிட்டி கீரை என்றும் சொல்வார்கள். இந்த மணத்தக்காளியின் அம்சமான 3 அற்புதங்கள் மற்றும் மருத்துவ குணங்களை காண்போம்.

  1. இலை
  2. காய்
  3. பழம்

மணத்தக்காளி இலை🍃, தண்டின்🎋 பயன்கள்

மணத்தக்காளி இலையை சுக்கிட்டி கீரை அல்லது மணத்தக்காளி🥗 கீரையென்று சொல்லலாம். நாம் இலையுடன் சேர்த்து சிறிய சிறிய தண்டையும் ஒடித்து சிறிது சிரிதாக்கி பொரியலாக சாப்பிடலாம். மேலும் சுக்கிட்டி தலையை கொண்டு சட்னி கூட அரைத்து சாப்பிடலாம்.

சுக்கட்டி பழம், காயின் பயன்கள்

சிறியவர்👦 முதல் பெரியவர்👴 வரை சுக்கிட்டி பழங்களை பிடிங்கி சுவைத்து சாப்பிடுவர். இது கருப்பு நிறத்துடன் கூடிய, இனிப்பு சுவையுடையது. மணத்தக்காளி காயின் காம்புகளை பிடிங்கி போட்டு விட்டு காய்களை நமது அன்றாட உணவிற்கு கொழம்பாக உபயோகிக்கலாம்.

சுக்கிட்டி காயின் மருத்துவ பலன்கள்

வாய் புண்😷

வாய் மற்றும் நாக்கில் நம் அனைவருக்கும் அடிக்கடி புண் ஏற்படுவது வழக்கம் அப்பொழுது நாம் சரியாக சாப்பிட கூட முடியாது.

அந்த சமயத்தில் மணத்தக்காளி இலையை பிடிங்கி 2 முறை வாய் நிறைய சாப்பிட்டால் வாய் புண் ஒரே நாளில் சரியாகி விடும்🥰.

வயிற்று மற்றும் குடல் புண்

அதிக காரம்🌶️ சேர்த்து கொள்ளும் அனைவரும் பொதுவாகவே சந்திக்க நேரிடும் வயிற்று புண் காலையில் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதுனாலும் ஏற்படும்.

இதை குண படுத்த சுக்கிட்டி கீரையை சாப்பிட்டால் உடனடியாக ஒரே நாளில் வயிற்று புண், எரிச்சல் நீங்கி அன்றாட வாழ்விற்கு வணக்கம் சொல்லலாம்.

கை, கால் வலி😫 மற்றும் காய்ச்சல்🤒

காய்ச்சல் மற்றும் கை கால் வலி இருக்கும் பொழுது சுக்கிட்டியை கூட்டாக செய்து சாப்பிட்டாலோ அல்லது கீரையாக செய்து சாப்பிட்டாலோ உங்களுக்கு வலி அனைத்தும் சரியாகி விடும்.

காய்ச்சலின் பொழுது சாப்பிடுவதே கஷ்டம், அந்த நேரத்தில் நீங்கள் இதை சாப்பிட்டால் கண்டிப்பாக குணமாகிவிடும்.

சிறுநீரகம்

சிறுநீரக கோளாறுகளை சரி செய்து சீராக செயல் படுத்தும் வல்லமை கொண்டது மணத்தக்காளி. வாரம் ஒரு முறை சுக்கிட்டி கீரையை சாப்பிட்டு வந்தாலே இதற்க்கு போதுமானது. நீர் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

காச நோய், மூச்சு திணறல்🥴, கல்லீரல்

காச நோய் நுரையீரலை பாதிக்க கூடிய ஒரு கொடிய நோய். இதனால் இரும்பல்🤧, நெஞ்சு வலி💔 ஆகியவை அடிக்கடி ஏற்படும்.

இந்த கொடிய நோயில் இருந்து நமக்கு விடுதலை வேண்டுமென்றால் மருத்துவமனை🏨 எல்லாம் போக தேவை இல்லை ஆரம்ப கால கட்டங்களில் இருந்தே மணத்தக்காளியை கீரையாகவோ அல்லது கொழம்பாகவோ சேர்த்து கொண்டால் நமக்கு இந்த நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். கல்லீரலுக்கு மிகவும் பலமூட்டும்.

புதிதாக கல்யாணம் ஆனவர்கள்

சுக்கிட்டி பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் கருத்தரிக்க செய்யும் (Pregnancy)🤰. முதலிலேயே கருத்தரித்திருந்தால் கருவை வலுவாக💪🏻🐣 பாதுகாக்க மணத்தக்காளி பழம் மற்றும் கீரை உதவும்.

இது போக கல்யாணம் ஆகி பல ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு மணத்தக்காளி பழம் மற்றும் கீரை சாப்பிடுவதன் மூலம் கருத்தரிக்க அதிக பட்ச வாய்ப்பு உள்ளது.

இசை ஞானிகள்🎷🎺 மற்றும் YouTubers🎥

பொதுவாக அதிகம் பேசக் கூடிய நபர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகளில் முதலில் இருப்பது மணத்தக்காளி.

அதிக அளவில் பாடுபவர், பேசுபவர் அல்லது சத்தமாக பேசுபவர்களின் தொண்டை, அடிக்கடி தொந்தரவு செய்து அவர்களின் பொழப்பைக் கெடுக்கும்.

அப்படி பட்டவர்கள் கண்டிப்பாக சுக்கிட்டிக் கீரையை சாப்பிட்டால் தொண்டை கட்டுவது வெகுவாக😖 குறையும்.

அழகு👩

மணத்தக்காளி கீரையை அதிக அளவில் சாப்புடுவதின் மூலம் உடல் மற்றும் முகம் அழகாக தோற்றமளிக்கும்.

இதயம் 💞

இதயத்தை நன்கு செயல்பட வைக்கும். இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்👨‍⚕️ சொல்லும் மருந்துகளை எடுத்து கொள்வதுடன் நிறுத்தி கொள்ளாமல் மணத்தக்காளி கீரையை அதிக அளவு உட்கொண்டால் இதயம் சீராக செயல்படும்.

தோல் வியாதிகள்

தோளில் அதிக அளவு எரிச்சல் மற்றும் வலி இருப்பவர்கள் சுக்கிட்டி கீரையை கொதிக்கும் நீரில் ஊற வைத்து அதை மருந்தாக மாற்றி எங்கு வலியோ அங்கு ஒத்திடம் கொடுப்பதன் மூலம் எரிச்சல் மற்றும் வலி வெகுவாக குறையும்.

தூக்கத்தின் நண்பன்💤😴

இன்று பலருக்கும் தெரியாத ஒரு உண்மை, சுக்கிட்டி கீரையை இரவு நேர உணவுடன் அளவாக சேர்த்து கொள்வதன் மூலம் உங்களுக்கு தூக்க மாத்திரையாக செயல்படுகிறது.

ஆக, சுக்கிட்டி கீரை, பழம், காய் அனைத்தையும் உணவுடன் சேர்த்து சாப்பிடுங்கள். நலமான 👨‍⚕️👩‍⚕️மற்றும் ஆரோக்யமான 🧘‍♂️வாழ்விற்கு மணத்தக்காளி உதவும்.

நீங்கள் தெரிந்து கொண்டால் போதுமா? உங்கள் நலம் காப்போருக்கும் தெரிய படுத்துங்கள்🗣️. Spread the Love🥰😍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here