அத்திப்பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

0
Athi Palam

அத்திப்பழம், காய் அல்லது பழம் வகையை சேர்ந்தது அல்ல, பூ💐 வகையை சேர்ந்தது. ஆம்,❕ ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அத்திப்பூ மற்ற மரங்களின் பூ போன்று இல்லாமல் சற்றுவித்தியாசமாக இருக்கும். அத்திக்காய் மிகவும் மென்மையான தோலுடன் சிறு சிறு விதைகளை 🌱 கொண்டு இருக்கும். உலர்ந்த அத்திப்பழத்தை உண்பது மிகவும் நல்லது.

அத்திப்பழத்தை எப்போது, எப்படி உண்ணவேண்டும்🤔?

அத்திப்பழம் சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் தங்க நிறங்களில் இருக்கும். அத்தி பழத்தை பன்னிரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் மிகவும் ஆரோக்கியமாக🧘 இருக்கும். அத்திப்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மூன்று முதல் ஏழு நாள் வரை உண்ணலாம்.

மருத்துவ குணங்கள்:

1. புற்றுநோய்🎗️:

அத்திப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருப்பதால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். ஊட்டச்சத்து👨‍⚕️ நிபுணர்கள் அதிக அளவில் பரிந்துரை செய்வது அத்திப்பழங்களை!

2. மலச்சிக்கல்🚽:

இப்பொழுது இருக்கும் நாகரிக வளர்ச்சியில் பெரும்பாலானோர் அவதிப்படுவது மலச்சிக்கல். அத்திப்பழத்தை இரவில் மூன்று முதல் ஐந்து வரை சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.

3. கெட்ட கொழுப்பு(கொலஸ்ட்ரால்) :

ஆரோக்கியமற்ற உணவு🍕, கூடுதல் எடையை பெற்றிருத்தல், சோம்பல்😴, மதுப்பழக்கம் 🥂, புகைபிடித்தல்🚬 ஆகிய காரணத்தால் கெட்ட கொழுப்பு(கொலஸ்ட்ரால்) அதிகரிக்கிறது. அப்படி அதிகரிப்பதால் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் வருகின்றது. அதில் இருந்து நம்மை காத்து கொள்ள அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

4. மதுப்பழக்கம்🍻:

குடிப்பழக்கத்தால் கல்லீரல் வீக்கம் அடைவதுண்டு. குடிப்பழக்கம் உள்ளவர்கள் அத்திப்பழத்தை வினீகரில் ஒரு வரம் வரை ஊறவைத்து தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் சரியாகும்.

5. இரத்த அழுத்தம்❣️:

புகைப்பிடிப்பதாலும்🚬, அதிக அளவில் மது அருந்துவதாலும்🍻, உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதாலும், மன அழுத்தம் போன்ற காரணகங்களினாலும்😣 வயதில் சிறியவர்களுக்கு⛹️ கூட இரத்த அழுத்தம் இருக்கிறது. அதனால் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தத்தில் உப்புகளின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

6. பார்வைக்கு சிறந்தது👀:

வயதானவர்கள் சிலர் கண் பார்வையை தொலைப்பதற்கு காரணமாக இருப்பது மாகுலர் சிதைவு. அத்திப்பழத்தை தவறாமல் சாப்பிட்டுவருவதனால் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான பார்வை கிடைக்கும்.

7. ஆஸ்துமா :

உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர மூச்சுக்குழாய்களில் இருக்கும் சளியை🤧 சுத்தம் செய்யும். எனவே ஆஸ்துமா உள்ளவர்கள் அத்திப்பழத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும். ஊறவைத்த நீரை கூட காலையில் அருந்தினால் நல்லது. இதை ஒன்று முதல் இரண்டு மாதம் வரை பின்பற்றினால் முன்னேற்றத்தை உணரலாம்.

அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள்😊:

அத்தியில் அத்தனையும் சத்து

  1. நார் சத்து(fiber)
  2. பீனோல் மற்றும் ஒமேகா-6
  3. பெக்டின்
  4. வைட்டமின் ஏ
  5. நிக்கோடினிக் அமிலம்
  6. அஸ்கார்பிக் அமிலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here