பனை மரத்தின் சிறிய வரலாறு:
பனைமரம் 108 நாடுகளில் வளர்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 30 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்பொழுது வெகுவாக அளிக்கப்பட்டு வருகிறது😟. பனையை பருவப்பனை(பெண்பனை) மற்றும் அழகுப்பனை(ஆண்பனை)என்று கூறலாம். பனை 10 ஆண்டுகளுக்கு⏳ பின்னரே 15m வளரும். வளர்ந்த பின்னரே ஆண்பனை, பெண்பனை வேறுபடுத்த முடியும். பனைமரம் சுமார் 30m🌴 நீளம் வளரும். இதன் இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் நீளமாக இருக்கும். பனை மரம் தண்ணீர் இல்லாமலே பழம் தருகிறது. பனைமரத்தின் பயன்களை ரசிக்கலாம் வாருங்கள்😋!
1000 தென்னை சாய்ந்தாலும் ஒரு பனை சாய ஒரு வாரம் புயல்🌊 அடிக்க வேண்டும்.
பனை ஓலை:
பனைமரம் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்😯. அதில் இருந்து கிடைக்கும் பயன்கள் ஏராளம். அதில் ஒன்று பனை ஓலை. பனை ஓலையில் அழகிய கைவினை பொருள்கள்🎁, வீட்டு உபயோக பொருள்கள், பனை விசிறி, பனை ஓலையை வைத்து கலைப்பொருள்கள் செய்து சிலர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆகவே, பனைமரம் பலருக்கு வாழ்வாதாரமாகவும்👔 இருக்கிறது.
பனங்கற்கண்டு:
பனைமரத்திலிருந்து நுங்கு, கள்🍺, பனங்கிழங்கு கிடைக்கிறது. பனைவெல்லத்தில் இருந்து கிடைக்கும் “பனங்கற்கண்டு” இனிப்பு😋 சுவையை கொண்டது. பனங்கற்கண்டை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம். வாய்துர்நாற்றம்😤, உடல்சத்து💪🏻, தொண்டைக்கட்டு, ஞாபகசக்தி🤔, நோய் எதிர்ப்பு, உடல் வெப்பத்தை சமமாக்குதல் போன்ற பல பயன்களை கொடுக்கிறது. கர்ப்பிணிபெண்கள்🤰 சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக🧘♂️ இருக்கும்.
கருப்பட்டி, வெல்லம்:
டீ, காப்பி☕ பிரியர்கள் இந்த உலகில் ஏராளம். அதில் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் கருப்பட்டி வெல்லம் உபயோகிக்கலாம். அப்படி அருந்தி வருவதால் நன்மைகள் பல. பனை வெல்லத்தில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது. பனைவெல்லத்தில் வெள்ளை சர்க்கரையை விட 60 மடங்கு கனிமங்கள் இருக்கிறது.
மலசிக்கல், உடல் எடை குறைப்பு, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றுதலுக்கு உதவும். மற்றும் குடல், உணவுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றை சுத்தம்👌 செய்ய உறுதுணையாய் உள்ளது.
பனங்கள்ளு:
பனை மரத்தின் கீழே பாலை🥛 குடித்தாலும் பார்ப்பவர்களுக்கு கள்🍻 தான்.
பழமொழி
பனங்கள்ளு மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆண்களுக்கு உடல்🏋️ வலிமையையும், விந்து சக்தியையும் அதிகரிக்க செய்யும். பனைமரத்தின் பாலை தெளுவு என்று கூறலாம். பனை பாளையை வெட்டி பால் போன்ற திரவம் படியும் அதை மண்பானைகளில் சேமிப்பார்கள். கள் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். கள் அருந்தினால் உடலுக்கு நல்லது மட்டுமல்லாமல் மயக்கம்💫 தரும். கள்ளை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். தமிழ்நாட்டில் கள் விற்பனை தடை🚫 செய்யப்பட்டுள்ளது. அதனால் தென்னங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பனங்கிழங்கு:
பனங்கிழங்கு மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. இதை வேகவைத்து துண்டுகளாக்கி சாப்பிடலாம். பனங்கிழங்கு சாப்பிடும் முறை பற்றி பார்க்கலாம்.
- வேகவைத்து அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இரும்பு சத்து கூடும்.
- பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால்🥥 சேர்த்து சாப்பிட்டால் உடல் பலம்💪 பெரும். பெண்களுக்கு கர்பப்பை வலுவடையும்.
- இது வாயு தொல்லை உடையது. எனவே பனங்கிழங்குடன் உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டு வரலாம். இனிப்பு பிரியர்கள் கருப்பட்டி சேர்க்கலாம்.
- பனங்கிழங்கு நார் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒற்றை தலை வலி உள்ளவர்கள் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.
நுங்கில் மறைந்துள்ள அதிசயங்கள் என்னவென்று தெரியுமா🤔?
பனையேற்றம்(மரமேறுதல்):
பனையேற்றம் என்பது மரமேறுதல். பனையேற்றம் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ராமநாதபுரம், நெல்லை, தூத்தூக்குடி மற்றும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மற்றும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தர்மபுரி பகுதிகளில் பனையேற்றம் நிகழும். பனைமரம் ஏறுவது பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் என பல திறன்களை உள்ளடக்கிய தொழில். பனைமரம் ஏறுவதன் மூலம் ஆண்களுக்கு உடல் மிக வலுவாகவும்💪 ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பனைமரம் எங்கு உள்ளது?
தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேல் பனை மரங்கள் உள்ளது. அதில் 50 சதவீதம் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் சென்னை, நாமக்கல், சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20 சதவிகித பனை மரங்களும் உள்ளன.
பனைத்தொழில்:
பனைமரம் ஆரோக்கியதிக்கு மட்டுமில்லாமல் பலரின் வாழ்வாதாரமாக இருக்கிறது. பனைமரத்திலிருந்து வரும் பனைஓலைகளை வைத்து கலைப்பொருள்கள், நார் பெட்டி, ஓலை பெட்டி, சிலம்பு கம்பம், கல்யாண பாய்கள், இடியாப்பம் தட்டு, வித விதமான கூடைகள், விசிறி, தொப்பி ஆகிய பொருள்களை சில மக்கள் கைத்தொழிலாக செய்து வருகின்றனர்.
நம் முன்னோர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன் அளித்து பழமை நிறைந்த பாரம்பரியம் மிக்க அனைவராலும் மறக்கப்பட்ட பனைமரத்தின் பெருமையை அனைவர்க்கும் பகிர்வோம்🔗.
It was useful, and it reminded my memoirs thank you